தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில் தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கின்றது. அதன்படி எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு வரும் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விரிவான விபரங்கள் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.