இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுவதாக ஜிம்பர் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் அனுமதி நிறுத்தப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.