நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி தொடங்கிய போது சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்தது. பின்னர் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர மட்டும் சிறப்பு விமானங்கள் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இயக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் ஏப்ரல் 30ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தி வைப்பதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.