நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இதையடுத்து தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பொறியல் கல்லூரி மாணவர்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் விடுதியை காலி செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் 31-க்குள் செய்முறை பயிற்சிகளை முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் உள்ள மாணவர் விடுதிகளை காலி செய்ய அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.