நடப்பாண்டு மதுரை மாவட்ட சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
இதையடுத்து 14ஆம் தேதி திருக்கல்யாணம், 15ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.