Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏப்ரல் 6 முதல்…. கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்…. சூப்பர் கிங்ஸ் அகாடமியின் அறிவிப்பு….!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  உருவாக்கிய சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம்  மற்றும் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அணி மைதானதில் வருகின்ற 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த கிரிக்கெட் முகாமில் 6 முதல் 23 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் www.superkingsacademy.com என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் முகவரிகளை  பதிவு செய்து கொள்ளலாம் என சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |