இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்கத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனால் ஊரடங்கு, நிகழ்ச்சிகள் நடத்துவதில் கட்டுப்பாடு, கட்டாய விதிமுறைகள் அனைத்தும் இனி இருக்காது. மகாராஷ்டிராவின் புத்தாண்டு (குதிப்படுவா) வருவதை முன்னிட்டு முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு வலியுறுத்தியுள்ளது.