Categories
தேசிய செய்திகள்

ஏப்-4 முதல் புதிய விதிமுறை…. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான அறிவிப்பு…!!!!

எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா வங்கியை  தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியும்  காசோலை கட்டண முறையில் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி தொடர்ந்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் பணம் செலுத்துவது தொடர்பாக விதிகளை மாற்றி வருகிறது. நீங்கள் பஞ்சாப் நேஷனல் பேங்க் ன் வாடிக்கையாளர்களாக இருந்தால் முக்கியமான செய்தி. பஞ்சாப் நேஷனல் வங்கி நேர்மறை கட்டண முறையை செயல்படுத்தப்போகிறது. இது பற்றி  அந்த வங்கி அறிவித்துள்ள தகவலில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் இந்த புதிய விதி கட்டாயமாக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறை காசோலை செலுத்துவதற்கான சரிபார்ப்புடன் தொடர்புடையதாகும். இதற்கு முன் எஸ்.பி.ஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் மட்டுமே இந்த pps முறை செயலில் இருந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் நேர்மறை ஊதியமுறை  கட்டாயமாக்கப்படுகிறது. இந்த விதியின் படி வங்கி கிளைகளில் 10 லட்சம் அல்லது அதற்கும் மேல் காசோலை  வாங்கினால் அதற்கு உறுதிப்படுத்துதல் அவசியமாகும். இதில் கணக்கு எண்,  காசோலை தேதி, மற்றும் பணியாளர்  பெயர் ஆகியவற்றை  கொடுக்கவேண்டும்.

இந்தப் pps  நடைமுறை பண மோசடிகளை  தடுப்பதற்காகவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலன் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் காசோலை வழங்கும் போது அவர் வங்கியில் முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். காசோலை விவரங்களை வங்கிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும். இந்த விவரங்கள் வங்கி தரப்பில் சரிபார்க்கப்படும் ஏதேனும் முரண்பாடு இருப்பது தெரியவந்தால் காசோலை  நிராகரிக்கப்படும்.

Categories

Tech |