தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதியோடு அரசியல்வாதிகளுக்கு மக்களின் மேல் உள்ள பாசம் தீர்ந்துவிடும் என்று இயக்குனர் தங்கர்பச்சன் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது மீண்டும் அடக்கி வைத்திருக்கும் பாசத்தை பொழிய தொடங்குவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மட்டுமே தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.