ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் 2014ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தென்மேற்கு மாகாணமான தைஸில் அடையாளம் தெரியாத நபர்களால் புகைப்படம் பத்திரிக்கையாளரான பவாஸ் அல் வாபி என்பவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதனை உள்ளூர் காவல் அதிகாரி உறுதி செய்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது “கொல்லப்பட்ட புகைப்படம் பத்திரிக்கையாளர், வாதி அல் காதி பகுதியில் தன் காரில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்” என்று தெரிவித்தார். ஆனால் இந்த கொடூர கொலைக்கான பின்னணி குறித்து உடனே தெரியவரவில்லை. இதுபற்றி அங்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மேலும் இக்கொலைக்கு யாரும் பொறுப்பேற்கவும் இல்லை. கடந்த சில வருடங்களாகவே பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படம் பத்திரிக்கையாளர்கள் அங்கு கொலை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.