Categories
உலக செய்திகள்

ஏமாத்திய சீனா … மூடி மறைச்சுட்டு…. திரும்ப திரும்ப சாடும் ட்ரம்ப் …!!

அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் சீனா மிகப்பெரிய சேதத்தை விளைவித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டிவுள்ளார்.

அமெரிக்காவில் 29 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கொரோனா சீனாவின் ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியது.

கடந்த சனிக்கிழமை அதிபர் ட்ரம்ப் தனது நாட்டின் 244 வது சுதந்திர தின உரையில், கொரோனா விவகாரத்தில் சீனா ரகசியம் காத்ததும், ஏமாற்றியதும், மூடி மறைத்ததுமே உலகம் முழுவதும் 189 நாடுகளுக்கு கொரோனா பரவ காரணமாகிவிட்டதாகவும்,  கொரோனா பாதிப்பிற்கு முழுமையாக சீனாவே பொறுப்பு ஏற்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் சீனாவை குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |