Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏமாற்றி அழைத்து சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையாங்குழி நாராயணசாமி கோவில் தெருவில் பிரபு(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பிரபு சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழங்கப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரபுவை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |