Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏமாற்றும் திமுக அரசு…! கிளறி விடும் பாஜக…. அடுத்தடுத்து ஷாக்…. மாநிலம் முழுவதும் போராட்டம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி, மாநில இளைஞரணி இரண்டு அணிகளும் சேர்ந்து, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்திற்கு எதிராக, தன்னுடைய தேர்தல் அறிக்கையிலே ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் 4 ரூபாய் குறைப்பதாக சொல்லிவிட்டு அதன் பின்பு ஒரு மாதம் கழித்து மக்கள் போராட ஆரம்பித்த போது அதை பெயரளவுக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, மக்கள் கேள்வி கேட்ட போதெல்லாம் நாங்கள் எப்போதும் நேரம் சொன்னோமா, காலம் சொன்னோமா, மத்திய அரசு குறைக்கட்டும் நாங்கள் குறைக்கிறோம், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் வருவதை நாங்கள் விடமாட்டோம், இதேபோல் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆறு மாத காலமாக….

தீபாவளி தினத்தன்று நம்முடைய மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் குறைத்திருக்கிறது. நம்முடைய போராட்டம் மாநிலத்திற்கு எதிராக… குறிப்பாக குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருப்பதை குறைக்க வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சி உடைய வலியுறுத்தல்…. சில மாநிலங்களில் 13 ரூபாய், 9 ரூபாய், 10ரூபாய் குறைத்து  இருக்கிறார்கள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப… ஆனால் ஆட்சிக்கு வந்து விட்டு ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள்.

சொன்ன ஐந்து ரூபாயும், நான்கு ரூபாயும் குறைக்க மாட்டோம் என்றால் அப்ப தேர்தல் வாக்குறுதிக்கு என்ன விலை ? அதை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன விலை? அது எல்லாத்தையும் தாண்டி இத்தனை காலமாக இவர்கள் பேசிய பேச்சுக்கு என்ன விலை ? அதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒரு ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல அடுத்த இரண்டு தினங்கள் விட்டு நம்முடைய விவசாய அணி நண்பர்கள், தமிழகம் முழுவதும் மாட்டு வண்டி பயணம் மூலமாக தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை சொல்லுவார்கள், 2 தினம் கழித்து நம்முடைய கல்வியாளர் பிரிவு தன்னுடைய ஆர்ப்பாட்டம் மூலமாக தன்னுடைய வெற்றியை வெளிப்படுத்துவார்கள். இதேபோல் தொடர்ச்சியாக அடுத்த பத்து நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநிலம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Categories

Tech |