Categories
மாநில செய்திகள்

‘ஏம்பா எப்ப பாத்தாலும் குடிக்கிற’….. கேள்வி கேட்ட மகள்கள்…. கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை…. கொடூர சம்பவம்….!!!

குடிபோதையில் தனது 2 மகள்களை கட்டையால் தாக்கி கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது மகள் தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து மீண்டும் மது போதையில் வீட்டிற்கு வந்து கோவிந்தராஜ் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவருடைய மூத்த மகள் 16 வயதான நந்தினி, கடைசி மகள் 9 வயது சிறுமி தீபா இருவரும் வீட்டில் இருந்தனர். வழக்கம்போல் கோவிந்தராஜ் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் இரு மகள்களும் கோவிந்தராஜனுடன் சண்டை போட்டுள்ளனர்.  இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மதுபோதையில் கட்டையால் தனது 2 மகள்களையும் தாக்கி கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அவரை பிடித்து சென்றனர். மதுபோதையில் தனது இரு மகள்களையும் அடித்துக் கொன்ற தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |