Categories
சினிமா தமிழ் சினிமா

ஏம்மா இப்படி பண்ற….? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல…. மகாலட்சுமிக்கு நெட்டிசன்கள் திடீர் அட்வைஸ்….!!!!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. இந்த புதுமண தம்பதிகள் தற்போது மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வரும் மகாலட்சுமி தான் தனியாக இருக்கும் 2 புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இணையதள வாசிகள் விக்கியும்-நயனும் ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் சேர்ந்து இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் நீங்கள் ரவீந்தரை விட்டுவிட்டு தனியாக இருக்கும் புகைப்படத்தை மட்டுமே எதற்காக வெளியிடுகிறீர்கள்? உங்களுடைய காதல் கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது என்று கூறுகின்றனர். மேலும் ஏற்கனவே மகாலட்சுமி பணத்திற்கு ஆசைப்பட்டு தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் பணத்திற்கு ஆசைப்படவில்லை என்றும், 2 வருடங்கள் காதலித்து தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் எனவும் ரவீந்தர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |