சிறுப்பத்தூர் ஏரிக்கரையில் உள்ள பனை மரங்களை மர்மநபர்கள் வெட்டியுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் அருகில் சிறுப்பத்தூரில் 100க்கும் அதிகமான பனை மரங்கள் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை பகுதியில் அமைந்த 5 பனைமரங்களை மர்ம நபர்கள் நேற்று வெட்டியுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்ததால் மர்ம நபர்கள் தப்பித்துச் சென்றனர். எனவே பனை மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.