தஞ்சாவூர் மாவட்டம் சில்லத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து 56 ஏக்க விளைநிலங்கள் மற்றும் நான்கு வீடுகள் போன்றவற்றை அகற்றி உள்ளனர்.
மேலும் ஏரியின் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த இடும்பன் கோவிலை இடிக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர். இதனை அடுத்து அதிகாரிகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏரி கரையில் உள்ள இடும்பன் கோவிலை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.