Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளியான கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் கிருஷ்ணப்பா சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிருஷ்ணப்பாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுநாத், ஜெயக்குமார், நாராயணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கிருஷ்ணப்பா மஞ்சுநாத்தின் உறவுக்கார பெண் ஒருவரை தவறாக பேசியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் மஞ்சுநாத் உள்பட 3 பேரும் கிருஷ்ணப்பாவை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |