பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவையூர் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவையூர் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஏரிக்கரையில் கூட்டமாக குவிந்தனர்.
அதன்பின்னர் ஏரிக்குள் கும்பலாக இறங்கிய அவர்கள் வேட்டி, சேலை மற்றும் மீன்பிடி வலைகளை பயன்படுத்தி ஏரியில் உள்ள மீன்களை பிடித்தனர். அதன்பின் ஏரியில் பிடிபட்ட மீன்களுடன் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். மேலும் கொரோனா தொற்று பரவி வரும் காலத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.