Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் உயர்ந்த நீர் மட்டம்…. மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றிய குத்தகைதாரர்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

ஏரியில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றிய குத்தகைதாரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 மாதங்களாக குத்தகைக்கு எடுத்தவர் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த மழை காரணமாக பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்ததால் மீன் பிடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீன் பிடிப்பதற்காக அங்கு மதகு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் வழியாக தண்ணீரை வெளியேற்றி மீன்பிடித்து வந்தனர்.

இதனால் மழைநீர் வீணாக வெளியேறியது. இது குறித்து அறிந்த கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் பிரதிமங்கலம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். இது ஏரியிலிருந்து குத்தகைக்கு எடுத்தவர் தேவையின்றி மழை நீரை வெளியேற்றி மீன் பிடித்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து குத்தகைக்கு எடுத்தவரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்ற முடியாத வகையில் மண்ணால் தடுப்புகள் அமைத்துள்ளனர்.

Categories

Tech |