ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை பகுதியில் இருக்கும் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது பெண்ணின் உடலுக்கு அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் காலியாக இருந்துள்ளது. மேலும் அருகே கிடந்த மணி பரிசில் சேலம் மாவட்டம் வீரகனூரில் இருந்து பெரம்பலூருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த பயணச்சீட்டு இருந்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.