Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏரியில் குளிக்க சென்ற மாணவர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நடந்தது என்ன…??

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் (10), அஜித் (9), சந்திப் (7) என மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் லாடபுரம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது மகன் ஜீவன் குமார் (8). இவர்கள் நான்கு பேரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 4 மாணவர்களும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தனர். அதன் பின் நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற போது 4 பேரில் ஒரு மாணவன் பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவனை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து ஒருவர் பின் ஒருவராக 4 பேரும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர். அவர்களில் அஜித் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டுள்ளான்.

இதை அறிந்த அந்த பகுதி மக்கள் அஜித்தை மீட்டுள்ளனர். மேலும் மற்ற மாணவர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரியாததால் அஜித்தை மீட்டவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் மீட்கப்பட்ட அஜித்  பயந்து உடனடியாக வீட்டிற்கு சென்று விட்டான். இதனையடுத்து இரவு 7 மணிக்கு மேலாகியும் மாணவர்கள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் இந்த மூன்று மாணவர்களும் நீரில் மூழ்கிய சம்பவம் தெரியவந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அருள், அவரது தம்பி சந்திப் மற்றும் ஜீவன் குமார் ஆகிய மூன்று பேரையும் பிணமாக மீட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |