Categories
உலக செய்திகள்

ஏரியில் தத்தளித்த முதியவர்…. மூன்று மாணவர்கள் செய்த செயல்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அமெரிக்காவில் ஏரியில் தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய மூன்று மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரனும், சுந்தரம் பாஸ்டர்ன்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர்த்தி கிருஷ்ணாவின் மகனுமானவர் அஞ்சன் மணி. இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கார்னல் எஸ்சி ஜான்சன் வணிக கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை நாளன்று அஞ்சன் மணி அவரது நண்பர்கள் பிலிப் மற்றும் அலெக்சாண்டர் சங்குவை அழைத்துக் கொண்டு நியூயார்க் நகரை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அச்சமயம் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் ஏரியில் தவறி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இவர்கள் அவரை காப்பாற்றுவதற்க்காக அந்த ஏரியின் அருகில் சென்றுள்ளனர்.

அப்போது அஞ்சன் மணி அந்த கரையில் இருந்து முதியவரின் கையை பிடித்து கொண்டிருக்கும் போது பிலிப் மட்டும் ஏரிக்குள் இறங்கி அந்த முதியவரை தூக்கி கொண்டு கரைக்கு வர முயற்சி செய்துள்ளார். ஆனால் பிலிப்பின் கையில் காயங்கள் இருந்ததால் அவரால் முதியவரை தூக்க முடியவில்லை. இதனையடுத்து அஞ்சன் மணியும், அலெஸ்சாண்டர் சங்குவும் ஏரியில் இறங்கி பின் மூவரும் சேர்ந்து அந்த முதியவரை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இத்தகவல் கேட்டு அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த மூன்று மாணவர்களையும் அழைத்து சென்று பாராட்டியுள்ளனர். மேலும் இதுகுறித்து அஞ்சன் மணி முகம் தெரியாத நபரின் உயிரை காப்பாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி தி தமிழ் இந்து என்ற பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் இந்த மூன்று மாணவர்களையும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |