Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏரியில் பிணமாக மிதந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவர் …. திண்டுக்கல்லில் பரபரப்பு …!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாயமான ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி காந்திமதி. அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன்,  அதன் பிறகு வீடு திரும்பாததால் கொடைக்கானல் காவல்நிலையத்தில் காந்திமதி புகார் அளித்தார். இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரே நட்சத்திர ஏரியில் ஒருவரின் உடல் மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் ஏரியில் மிதந்த நபரின் உடலை மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் ஏரியில் பிணமாக மிதந்தவர் சந்திரன் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சந்திரன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாராவது அவரை ஏரியில் தள்ளி விட்டதில் இறந்து போனாரா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |