ஏரியில் ஆண் சடலாமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மொளசூர் பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கிளியனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். அதன்பிறகு பிரேத பரிசோதனைக்காக அந்த நபரை உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.