Categories
உலக செய்திகள்

ஏரியில் விழுந்த விமானம்….திடீரென ஏற்பட்ட கோளாறு…. மீட்பு பணியில் ராணுவத்தினர்….!!

போர் விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மியான்மர் நாட்டில் உள்ள சகாயம் நகரின் அருகே உள்ள ஏரியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தானது தொழில் நுட்பக் கோளாறு காரணத்தினால் ஏற்பற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் விபத்து நடந்த இடத்தில் எடுக்கபட்ட உடல் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும் நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மியான்மரில் ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்  நடைபெறும் இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |