Categories
தேசிய செய்திகள்

ஏரி உடையும் அபாயம்.. 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக திருப்பதியில் மிகப்பெரிய ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏரி உடைந்தால் காலாஸ்திரி உள்ளிட்ட 80 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் இந்த ஏரியில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கனமழை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |