ஏரி தூர்வாரும் பிரச்சினையில் விவசாயி உதட்டை கடித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாராபுரம் கூட்ரோடு பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கீழ்மாவிலங்கு பகுதியில் ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடார்பாக ஊர் மக்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும் ஊர் மக்களுக்கும் இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் கிருஷ்ணமூர்த்தி அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான வத்தமலை என்பவரின் உதட்டை கடித்துள்ளார்.
இதில் வத்தமலையின் உதடு துண்டிக்கப்பட்டு வலி தாங்காமல் அலறியுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் வத்தமலையை உடனடியாக மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக வத்தமலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.