Categories
சினிமா தமிழ் சினிமா

ஏரி நிலம் ஆக்கிரமிப்பு… சூடு பிடித்த வழக்கு… நடிகர் ஜெய் சூர்யா மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்…!!!!!

தமிழ் திரையுலகில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற சில படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் ஜெயசூர்யா. இவர் மலையாள திரை உலகில் இரண்டாம் நிலையில் உள்ள நடிகர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் மீது நில ஆக்கிரமிப்பு தற்போது கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியாகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2016 ஆம் வருடம் ஜெயசூர்யா கொச்சி கடவன் தரா பகுதியில் தான் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள சில வன்னூர் ஏரிக்கு செல்லும் வழியில் 3.7 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் அப்படி ஆக்கிரமித்த இடத்திற்கு இடத்தை சுற்றி தடுப்பு சுவர் எழுப்பி உள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அதே சமயம் அப்போது அந்த வழக்கு விசாரணையின் போது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும் அது புறம்போக்கான நிலம் என்றாலும் கூட குழந்தைகள் விளையாடும் போது ஏரிகளில் தவறி விழுந்து விடாமல் இருப்பதற்காகவே சுற்றுச்சூழல் அமைத்தேன் அதனால் தான் அதை இடிக்க கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் அப்போதைக்கு நீதிமன்றம் ஆக்கிரமிப்பை இழக்க இடைக்கால தடைவிதித்தது இந்த நிலையில் தான் அந்த வழக்கு சூடு பிடித்து ஜெயசூர்யா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவிற்கு தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |