Categories
உலக செய்திகள்

ஏரோபிளேன் கூட போட்டியா….? விமான ஓடுதளத்தில் தாறுமாறாக ஓடிய கார்…. வெளியான காணொளி….!!

நபர் ஒருவர் மது அருந்திவிட்டு விமான நிலைய ஓடுதளத்தில் வாகனத்தை ஓட்டிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாங்காங்கில் ஸ்வர்ணபூமி என்ற விமான நிலையத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். இச்சம்பவம் தைகர் செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் அந்த நபர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில் விமானம் ஒன்று தரை இறங்கி கொண்டிருக்கிறது.

அச்சமயத்தில் கார் ஒன்று விமான நிலையத்தின் ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த காரை விரட்டி செல்கின்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது.கோங்ஸாக் என்ற நபர் ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை தற்போது வரை சுமார் 10,85 ,000 நபர்கள் பார்த்துள்ளனர். மேலும் தைகர் செய்தி அறிக்கையில், வாகனத்தை குடிபோதையில் ஓட்டி வந்த அந்த நபர் சேதம் எதையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு முன்பே அவரை அதிகாரிகள் பார்த்து விட்டதால் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டனர்.

மேலும் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அந்த நபரின் வாகனத்திலிருந்த மதுபாட்டில், போதைப்பொருள்கள் போன்றவையும் விமான பாதுகாப்பு அதிகாரிகளால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் மீது தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைதல், சட்டவிரோதமான முறையில் போதை பொருள் வைத்திருத்தல் மற்றும் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |