இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று 5ஜி ஏலம் நடந்தது. இதனையடுத்து ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையை தொடங்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திலேயே 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏர்டெல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தற்போது முக்கிய அப்டேட் ஒன்றை வழங்கி உள்ளது. அதன்படி ஏர்டெல்லின் 4ஜி சிம்கள் 5ஜி திறன் கொண்டவை. 4ஜி சிம்கள் 5 ஜி சேவைகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களிடம் 5ஜி போன் இருந்தால் அதில் 5 ஜி சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் 5 ஜிசேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.