Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல். ஜியோ, விஐ… குறைவான டேட்டா ப்ளான்களில் எது பெஸ்ட்…?

இந்தியாவில் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலைக்கு மொபைல் டேட்டாவை வழங்கி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் டேட்டாக்களை அறிவித்து வருகின்றனர். அது குறித்து இதில் பார்ப்போம்.

ஜியோ

ஜியோ நிறுவனம்  ரூ.11 பிளான்,  1ஜிபி டேட்டா போன்ற  நன்மைகளை  வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம்  இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம்  ரூ.21 பிளான் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம் ஏற்கனவே இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப்போகும். குறிப்பாக ஜியோவின் இந்த இரண்டு பிளான்கள் டேட்டா நன்மையை மட்டுமே வழங்கக்கூடிய திட்டங்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா (வி)

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் 16 ரூபாய் பிளான்  1ஜிபி டேட்டா நன்மை மற்றும் 1 நாள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. இந்நிறுவனம் வழங்கும் ரூ.48 பிளான் ஆனது 3ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் வோடபோன் ஐடியா வழங்கும் இந்த இரண்டு பிளான்களும் எஸ்எம்எஸ், கால் அழைப்பு நன்மைகளை வழங்காது. அதாவது டேட்டா நன்மையை மட்டுமே வழங்கக்கூடிய பிளான்கள் ஆகும்.

ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தின் மலிவான விலை பிளான் ரூ.48 ஆகும். இது 3ஜிபி டேட்டா நன்மையுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டது . ஏர்டெல் வழங்கும் இரண்டாவது மலிவான திட்டத்தின் விலை ரூ. 78 இது மொத்தம் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.19 பிளான், 1ஜிபி டேட்டா நன்மையுடன் ஒரு நாள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. அடுத்தது  ரூ.56 பிளான், 10ஜிபி டேட்டா நன்மையுடன் 10 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டது . ஆனால் மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இரண்டு பிளான்களும் இடத்திற்கு இடம் நன்மைகளில் வேறுபடுகின்றன.

Categories

Tech |