#BO YC OT ஏர்டெல் வோடபோன் என்ற ஹஸ்டக்தான் சமூக வலைதளங்களில் இப்போது டிரென்ட் ஆகியுள்ளது.
ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களைப் போலவே ஜியோவும் டேட்டா கட்டடணத்தோட விலையை உயர்த்தி இருக்கிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஜியோ 20% கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு தான் நாம எல்லாரும் சின்ராச தேட ஆரம்பித்திருக்கிறோம் என்று மாதிரியான மீம்ஸ்கள் பிஎஸ்என்எல்-க்கு ஆதரவா சமூகவலைதளங்களில் உலா வரத் தொடங்கியிருக்கு.
சேதுபதி ஐபிஎஸ் படத்தில் கவுண்டமணி கப்பல் வேலைக்கு போயிட்டு திரும்ப வந்து மன்னிப்பு கேட்கிற மாதிரி தான் இன்னைக்கு எல்லாரும் பிஎஸ்என்எல் கிட்டே போயி நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2000 ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 2008-ஆம் ஆண்டு வரை அரசுக்கு பெரிய அளவிலான லாபத்தை கொடுத்தது. எல்லாம் நல்லா போய்க் கொண்டிருக்கும் போது தான் 2009-ல் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் அதிகம் சந்திக்க வந்தார்கள். அவங்களோட வருகைக்குப் பிறகே பிஎஸ்என்எல்-ஓட நிலைமை கொஞ்சம் கவலைக்கிடமாகியது.
தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை கண்டிஷன், ஜியோ வருகைக்குப் பின்னர் சுத்தமாக காலியாகி விட்டது என்று கூறலாம். அரசும் எந்த நிறுவனங்களோடு போட்டி போடுவதற்கு பெரிய முயற்சிகளை எடுக்காததால் பிஎஸ்என்எல் ஓட நிலைமை ரொம்பவே கவலைக்குரிய நிலைமையில் தான் உள்ளது. மக்களும் குறைந்த விலையில் டேட்டா மற்றும் இலவச அழைப்புகள் தந்ததால் பிஎஸ்என்எல்-ஐ அம்போன்னு விட்டுட்டு ஜியோ, ஏர்டெல், வோடபோன்-னு போயிட்டாங்க.
மக்களை உள்ளே இழுத்துவிட்டு, பின்னாடி விலையை ஏற்றிக் கொள்ளலாம் முடிவில் இருந்த தனியார் நிறுவனங்கள், அதை சரியா செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நண்பன் படத்தில் ஸ்ரீகாந்த் அப்பா அந்த கேமரா என்ன விலை என்று சொல்லு வாங்கிடலாம்னு சொல்ற மாதிரி இந்த பிஎஸ்என்எல் சிம் என்ன விலை என்று கேட்டுட்டு இருக்காங்க வாடிக்கையாளர்கள். இது தொடர்பாக மீம்ஸ்களை போட்டு #BO YC OT ஜியோ ஏர்டெல் வோடபோன் என்ற ஹாஸ்டேக்கும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.