நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 5g சேவை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 5 ஜி சேவையை இந்தியாவில் 11 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுறி, குவாத்தி, பானிபட், நாக்பூர், வாரணாசி மற்றும் குரு கிராம் ஆகிய நகரங்களில் இனி 5g சேவை வழங்கப்படும். விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் 5 ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புனேவில் விமான நிலையங்களில் மட்டும் ஏர்டெல் 5ஜி சேவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெறுவதற்கு பயனர்கள் 5g சேவையை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.