Categories
டெக்னாலஜி

“ஏர்டெல் பயனாளர்களே”…. இத யூஸ் பண்ணுங்க…. கரண்ட் பில் குறையும். பல சலுகைகளும் கிடைக்கும்….!!!

ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து நிதி சேவையை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு வழங்கப்படுகின்றது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ‘இப்போது வாங்குங்கள், பிறகு செலுத்துங்கள்’ என்ற சலுகைகளின் மூலம் வழங்க உள்ளது. இதனால் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக்குகள் மற்றும் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் நீங்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி மின்சாரம், தண்ணீர் அல்லது கேஸ் கட்டணங்கள் போன்றவற்றை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலமாக செலுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும். மற்ற அனைத்து செலவுகளுக்கும் ஒரு சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.

இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, ஏர்டெல் நன்றி என்ற செயலி மூலமாக கிரெடிட் கார்டு கிடைக்கும். மேலும் இந்த கிரெடிட் கார்டு மூலமாக ஆக்சிஸ் வங்கி வழங்கக்கூடிய பல்வேறு சேவைகளும் கிடைக்கும். அதுமட்டுமின்றி ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம், மெசேஜிங் தளம், வீடியோ சிஸ்டம், ஸ்ட்ரீமிங், கால் மாஸ்கிங் மற்றும் விர்ச்சுவல் கான்டெக்ட் போன்ற டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும். இந்த கூட்டணி மூலமாக ஏர்டெல்லின் 340 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கியில் கடன் மற்றும் பல்வேறு சேவைகளை பயன்படுத்தவும், அதன் மூலம் நிதி சலுகை கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

Categories

Tech |