ஏர்டெல் நிறுவனம் ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சோதனை முறையில் இந்த கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியா முழுவதும் புதிய விலை மாற்றி அமைக்கப்படும் எனவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த திடீர் கட்டண உயர்வு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.