மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
ஓமன் – மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விசாரணை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.