நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பதினோரு மணியளவில் தாக்கல் செய்தார். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.. எல்ஐசி பங்குகளின் விற்பனை தொடங்கி உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..