வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களை இயக்க ஹாங்காங் நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்திருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்த பட்டிருப்பதால், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். அந்தந்த நாடுகளில் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த விமானங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் ஹாங்காங்கில் ஏர் இந்தியாவின் வந்தே பாரத் விமானங்களை இயக்க அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப் பயணங்களுக்கு முன்பாக முறையான கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், இன்று முதல் 31-ஆம் தேதி வரையில் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஹாங்காங்கில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து ஹாங்காங் இருக்கும் சிறப்பு விமானங்கள் எதுவும் இயங்க முடியாத நிலை உண்டாகியுள்ளது. டெல்லியில் இருந்து கடந்த 14ஆம் தேதியன்று ஹாங்காங் வந்த விமானத்தில் பயணித்தவர்களில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.