வட அமெரிக்காவிலேயே ஏர் கனடா தான் மிக மோசமான விமான நிறுவனம் என ஹாரி பாட்டர் நடிகர் மேத்யூ லீவிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹாரி பாட்டர் படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் மேத்யூ லீவிஸ். இவருடைய வயது 33 ஆகிறது. பிரித்தானி நாட்டை சேர்ந்த இவர் கனடாவில் ஒர்லாண்டோவிலிருந்து டொராண்டோவுக்கு ஏர் கனடா விமானத்தின் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து மேத்யூ கூறியதாவது, ” நான் கேட்-ஐ அடைந்ததும் விமான நிறுவனம் தனது முதல் வகுப்பு டிக்கெட்டை கிழித்துவிட்டது. பின்னர் ஏர் கனடா விமான நிறுவனத்தின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். முதல் வகுப்பு டிக்கெட்டை கிழித்ததுடன், தனக்கு எகானமி டிக்கெட் வழங்கப்பட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்கவோ அல்லது தனது டிக்கெட்டை மீண்டும் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பையோ வழங்கவில்லை என்றும் பணத்தைத் திரும்பப்பெற விமான நிறுவனத்தை அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஏர் கனடா வட அமெரிக்காவிலேயே மோசமான விமான நிறுவனம் என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேத்யூவின் இந்த குற்றச்சாட்டுகளை அறிந்த விமான நிறுவனம் கூறியதாவது, “மேத்யூ. இதைக் கேட்டதற்கு நாங்கள் வருந்துகிறோம். சிக்கலின் கூடுதல் விவரங்களுடன் எங்களுக்கு ஒரு DM ஐ அனுப்பவும், நாங்கள் இங்கிருந்து உதவ முடியுமா என்று பார்ப்போம்” எனக் கூறியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது என்றும், இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் தனது கனடா பயணத்தை ரசித்ததாகத் தோன்றியதாக கூறிய மேத்யூ லீவிஸ், “சரி டொராண்டோ, நீங்கள் அனைவரும் சிறப்பாக இருந்தீர்கள். நீண்ட கால தாமதமான வருகை மற்றும் நீங்கள் ஏமாற்றவில்லை. உண்மையிலேயே அற்புதமான மனிதர்கள். என்னவொரு நகரம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.