Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஏறி இறங்கிய அரசு பேருந்து…. சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூரில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான மோகன் என்பவருடன் கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கஸ்தூரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது கரூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து கஸ்தூரி மீது ஏறி இறங்கியதால் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |