Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏறுமயிலேறி”…. நாட்டுப்புற பாணியில் உருவாகி இருக்கும் கார்த்தி பட பாடல்…. இணையத்தில் வைரல்….!!!!!

சர்தார் படத்தின் முதல் பாடலான ‘ஏறுமயிலேறி’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளியையொட்டி வருகின்ற 21-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் முதலிடம் பிடித்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான ஏறுமயிலேறி என்ற பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நாட்டுப்புற பாணியில் உருவாகியுள்ள இப்பாடலை நடிகர் கார்த்தி பாடி இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |