Categories
மாநில செய்திகள்

ஏறுமுகம் காட்டும் ஒமைக்ரான்….. சென்னையில் மீண்டும் லாக்டவுன்…? அச்சத்தில் மக்கள்….!!!!

சென்னையில் மேலும் 26 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும்  பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலமாக தமிழகத்திற்குள் நுழைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது. அதிலும் சென்னையில் 26 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தபடுமா? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் விரைவில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |