ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது . இதற்கு சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கார்த்திக் சிதம்பரம், வரி குறைப்பு கேட்பது இந்திய குடிமகனின் உரிமை என்று நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் விஜய பிரதீப் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து, அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது; துணிந்து நில். “ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த மன உறுதியோடு முன்னேறி வா தம்பி விஜய் என்று தெரிவித்துள்ளார்.