Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னசெடிபட்டி பகுதியில் தேங்காய் உறிக்கும் தொழிலாளியான கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருப்புசாமி அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார்.

கடந்த 8-ஆம் தேதி மாணவிக்கு மருத்துவமனையில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |