Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் வழக்கில் நத்தம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியதற்கு பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பது அந்த பெண்ணிற்கு தெரியவந்துள்ளது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் கடந்த 2018-ஆம் ஆண்டு விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாண்டியனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |