Categories
மாநில செய்திகள்

“ஏற்கனவே 3 கோவில்கள் இருக்கு”…. இங்கு இந்த கடை வேண்டாம்…. பா.ஜனதா எதிர்ப்பு…!!!!!

புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பா ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பா.ஜனதா திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர் மற்றும் திருச்சி தாராநல்லூர் கல் மந்தை உப்பிலியத்தெரு, பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெரு பகுதி மக்கள் கலெக்டர்அலுவலகத்திற்கு திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோடு, செக்கடி பஜார் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறது.

இந்தப் பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். மேலும் மதுபானக்கடை திறக்க உள்ள பகுதிகளில் பால சுந்தர விநாயகர் கோவில், மற்றொரு விநாயகர் கோவில், கொத்தாளத்து முனீஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோவில்கள் அமைந்திருக்கிறது. இந்த பகுதிக்கு குடிசை மாற்று வாரியத்திற்க்தகு சொந்தமான 300 வீடுகளில் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இடங்களில் மதுபானக்கடைகள் திறந்தால் தொழிலாளர்களும், பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் இப்பகுதியில் மதுபானகடை திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பாஜக கட்சி கொடுத்துள்ள மற்றொரு மனதில் திருச்சி மாநகர பகுதியில் கஞ்சா, போதை, மாத்திரைகள், போதை ஊசிகள், ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது. காந்தி மார்க்கெட், பாலக்கரை சத்திரம் பஸ் நிலையம், ராம்ஜிநகர் மத்திய பஸ் நிலையம் போன்ற இடங்களில் அதிகமாக விற்பனையாகிறது. அதனால் சமுதாய சீர்கேடு ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 503 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீது உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |