Categories
மாநில செய்திகள்

ஏற்காடு செல்வோருக்கு எச்சரிக்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எழில் மிகுந்த மலைப்பகுதி தான் ஏற்காடு. இங்கு வருடம் முழுவதும் வீசும் தென்றல் காற்றும், குளிர்ச்சியும் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வதற்கு என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வருவார்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு அண்ணா பூங்கா மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது இங்கு குறைந்தபட்ச அளவு 60 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையை, அதிகபட்ச அளவு 167 டிகிரி வெப்ப நிலையும் நிலவுகிறது. ஏற்காட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கோடை விடுமுறைக்கு படையெடுத்து வருவார்கள்.

இந்நிலையில் சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு மலைப்பதில்யில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று எஸ்பி ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டு உள்ளார். அவ்வாறு தலை கவசம் இன்றி வரும் சுற்றுலா பயணிகளை சோதனை சாவடியில் திருப்பி அனுப்பவும் அவர் அறிவுறுத்தியுள்ளார் மேலும் ஏற்காடு மலைப்பாதையில் சில நாட்களாக அதிக விபத்துக்கள் ஏற்படுவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |