ஏற்காடு, சேலம் நகரத்திலும் ஆங்காங்கே நேற்று இரவு மழை பெய்தது.
சேலத்தில் நேற்று பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் இரவு 7 மணியளவில் ஏற்காட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கனமழையால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஏற்காடு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
இதைப்போலவே சேலம் மாவட்டத்தில் உள்ள தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். சேலம் நகரத்திலும் இரவு 8 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இந்த மலையானது இரவில் விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.