Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் தொடங்கிய படகு சவாரி…. விடுமுறை தினத்தில் அலைமோதும் கூட்டம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு இல்லம், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடி சீட் போன்ற இடங்களுக்கு சென்றனர்.

அதன்பிறகு காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான சீதோஷ்ண நிலையும் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக சென்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Categories

Tech |